ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில் அதிக உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரு சக்கர வாகன விபத்துகளில் அதிக உயிரிழப்பு
Updated on
1 min read

ராணிப்பேட்டை: தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சாலை விபத்துகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 303 சாலை விபத்து உயிரிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில், தேசிய நெடுஞ்சாலையில் 2 ஆயிரத்து 330, மாநில நெடுஞ்சாலைகளில் 2 ஆயிரத்து 567, மாவட்ட சாலையில் ஆயிரத்து 153 மற்றும் கிராம சாலைகளில் ஆயிரத்து 253 சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாதங்கள் வரை 110 சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மாநில நெடுஞ்சாலைகளில் 96 மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் 14 சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மாவட்டத்தில் புள்ளி விவரங்களின்படி இரு சக்கர வாகன சாலை விபத்துகளின் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தலைக்கவசம் அவசியம்: எனவே, இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். 18 வயது நிரம்பாமல், ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்களை இயக்குவதை சிறுவர்கள் தவிர்க்க வேண்டும். சாலை விதிகளை பின்பற்றியும், வாகனங்களை முறையாக பராமரித்து வாகனங்களை இயக்க வேண்டும்.

விபத்து இல்லாத மாவட்டமாக ராணிப் பேட்டையை மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in