டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கைவினை கண்காட்சியில் ‘தஞ்சாவூர் ஓவியம்’

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் இடம்பெற்றுள்ள கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், கும்பகோணம் கலைஞர் பன்னீர்செல்வம் அமைத்துள்ள  தஞ்சாவூர் ஓவியங்கள் அரங்கு.
டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் இடம்பெற்றுள்ள கைவினைப் பொருட்கள் கண்காட்சியில், கும்பகோணம் கலைஞர் பன்னீர்செல்வம் அமைத்துள்ள தஞ்சாவூர் ஓவியங்கள் அரங்கு.
Updated on
1 min read

தஞ்சாவூர்: டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டு அரங்கில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், இந்தியாவில் உள்ள 7 கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் அவற்றை உருவாக்கும் முறை குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தஞ்சாவூரின் பாரம்பரியமாகவும், அடையாளங்களில் ஒன்றாகவும் விளங்கும் தஞ்சாவூர் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த, மத்திய அரசின் சில்பகுரு விருதுபெற்ற ஓவியர் பன்னீர் செல்வம், ஓர் அரங்கில் தஞ்சாவூர் ஓவியங்களைக் காட்சிப்படுத்தி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளித்துவருகிறார். இவற்றைப் பார்த்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வியந்து பாராட்டிச் செல்வதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தக் கண்காட்சியில் தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கைவினைப் பொருட்களுக்கான அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

இதில், தென் மாநிலங்களில் இருந்து தஞ்சாவூர் ஓவியம் இடம் பெற்றிருப்பது தமிழகத்துக்கு, குறிப்பாக தஞ்சாவூர் மண்ணுக்கு கிடைத்த பெருமையாகும். தஞ்சாவூர் ஓவியம் குறித்து நான் அளிக்கும் விளக்கத்தைக் கேட்டு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பாராட்டினர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in