மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கிய 8 டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்

மதுரையில் உள்ள மதுக்கடையில் ஆய்வு மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ச.விசாகன்
மதுரையில் உள்ள மதுக்கடையில் ஆய்வு மேற்கொண்ட டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ச.விசாகன்
Updated on
1 min read

மதுரை: மதுரையில் டாஸ்மாக் மதுக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்தது தொடர்பாக பணியாளர்கள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மதுக்கடைகளில் நிர்ணயிக்கப் பட்ட விலையை விட கூடுதலாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

பாட்டிலுக்கு ரூ.10 கூடுலாக விலை வைத்து விற்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை, சிவ கங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மது விற்பனை குறித்து, கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ச.விசாகன் ஆய்வு நடத்தினார். முது நிலை மண்டல மேலாளர் பா.அருண்சத்யா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 8 கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக 7 விற்பனையாளர்கள், ஒரு மேற்பார்வையாளர் என மொத்தம் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 5 ரூபாய் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 11 பணியாளர் களுக்கு ரூ.64,900 அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in