

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
அதன்படி இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக செந்தில் பாலாஜி தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த வழக்கு வரும் 11-ம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.