Published : 09 Sep 2023 07:52 AM
Last Updated : 09 Sep 2023 07:52 AM
சென்னை: தமிழக அரசின் தொழில்துறை செயலராக இருந்தவர் ச.கிருஷ்ணன். சமீபத்தில் இவரை, மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக மத்திய அரசு நியமித்தது.
இவரைத்தவிர, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ) மேலாண் இயக்குநராக இருந்த நீரஜ் மிட்டல் மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, டுபிட்கோ மேலாண் இயக்குநராக ஹனிஷ் சாப்ரா நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, தொழில்துறை செயலராக, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை செயலராக உள்ளவி.அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் தொழில்துறை செயலராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இருப்பினும், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாக வில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT