Published : 09 Sep 2023 06:20 AM
Last Updated : 09 Sep 2023 06:20 AM

நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு செப்.11 முதல் தொடங்குகிறது

சென்னை: நந்தனம் அரசுக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் 13 முதுநிலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற இந்த கல்லூரி `நாக்' குழுவின் சிறப்பு அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேருவதற்காக அரசின் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

அதன்படி விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு நாளையும், அறிவியல் துறை சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கு செப்.12-ம் தேதியும்,கலை, வணிகவியல் படிப்புகளுக்குசெப். 13-ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான நாட்களில் சார்ந்த துறைத் தலைவர்களை காலை 8.30 மணிக்கு நேரில் சந்திக்க வேண்டும்.

வரும்போது விண்ணப்பப் படிவம், கலந்தாய்வு கடிதம், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குபுத்தக நகல் (முதல் பக்கம்), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய ஆவணங்களை உடன் எடுத்து வரவேண்டும் என்று அந்த கல்லூரியின் முதல்வர் சி.ஜோதி வெங்கடேசுவரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x