மாநகராட்சி சார்பில் `தி சென்னை க்விஸ்' போட்டி: மேயர் பரிசு வழங்கினார்

மாநகராட்சி சார்பில் `தி சென்னை க்விஸ்' போட்டி: மேயர் பரிசு வழங்கினார்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற 'தி சென்னை க்விஸ்' போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மேயர் ஆர்.பிரியா பரிசுகளை வழங்கினார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகள் சார்பில் `சென்னையும், பெருநகர சென்னை மாநகராட்சியும்' என்ற தலைப்பில் மாபெரும் விநாடி-வினா போட்டியை கடந்த செப்.5, 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6 முதல் 9-ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.

மாநகராட்சி பள்ளிகள் அளவில் புத்தா தெரு - மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்எஸ்.மாலினி, பி.கே.சஹானா முதல்இடத்தையும், அடையார், காமராஜ்அவென்யூ- மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இ.கேஷ்ரியாமற்றும் டி.சிவராமகண்ணன் ஆகியோர்2-ம் இடத்தையும், விருகம்பாக்கம்- மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்.தினேஷ் குமார்,எம்.எஸ்.முகமது ராயிஸ் ஆகியோர்3-ம் இடத்தையும் பிடித்தனர்.

இதே போன்று அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகள், தனியார்பள்ளிகள் அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப்பரிசளிக்கும் விழா ரிப்பன் மாளிகைவளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் பிரியா பங்கேற்று,முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ,மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம்,3-ம் பரிசாக ரூ.4 ஆயிரம் மற்றும்பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணைமேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in