‘நியோ - மேக்ஸ்’ நிறுவன நிதி மோசடி: புகார் பெறும் சிறப்பு முகாமில் 117 பேர் மனு

மதுரையில் நடந்த முகாமில் எஸ்பி ஜோஸ் தங்கய்யா, டிஎஸ்பி மணிஷா ஆகியோரிடம் மனு அளித்த புகார்தாரர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரையில் நடந்த முகாமில் எஸ்பி ஜோஸ் தங்கய்யா, டிஎஸ்பி மணிஷா ஆகியோரிடம் மனு அளித்த புகார்தாரர்கள். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: ‘நியோ - மேக்ஸ்’ நிறுவன நிதி மோசடி தொடர்பாக மதுரையில் நடந்த புகார் பெறும் சிறப்பு முகாமில் விருதுநகர், ராமநாதபுரம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 117 பேர் மனு அளித்தனர்.

‘நியோ - மேக்ஸ்’ ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி, வைப்புத்தொகை பெற்று பல கோடி ரூபாய் நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கை எஸ்பி ஜோஸ் தங்கய்யா, சிறப்பு டிஎஸ்பி மணிஷா ஆகியோர் அடங்கிய குழுவினர் விசாரிக்கின்றனர். இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களை புகார் அளிக்கவிடாமல், அந்தந்தப் பகுதியில் உள்ள முகவர்கள் தடுப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பணம் கொடுத்து ஏமாந்த முதலீட்டாளர்கள் மனு அளிப்பதற்கான சிறப்பு முகாம் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 117 பேர் மனு அளித்தனர்.

இதுவரை ‘நியோ - மேக்ஸ்’ நிறுவனத்துக்கு எதிராக 400-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் வந்துள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in