Published : 08 Sep 2023 05:45 AM
Last Updated : 08 Sep 2023 05:45 AM

அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி தாமாக முன்வந்து வழக்கு

சென்னை: தமிழக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்தபடியாக தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கெனவே தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், கடந்த 2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகி்த்த பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார். இந்த வழக்குகள் இன்று காலை விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x