உதயநிதி மீது நடவடிக்கை கோரி சேலம் எஸ்.பி, ஆட்சியர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் மனு

உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியினர். | படம்: எஸ்.குரு பிரசாத் 
உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியினர். | படம்: எஸ்.குரு பிரசாத் 
Updated on
1 min read

சேலம்: சனாதனத்தை எதிர்த்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சேலம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பிலும், ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

சேலம் எஸ்பி அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரின் பதவியை பறிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி புகார் மனுவை கட்சி நிர்வாகிகள் வழங்கினர். “இந்து மக்களுக்கு எதிராகவும் பேசி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையிலான நிர்வாகிகள், ‘சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகார் மனுவில், ''சனாதன ஒழிப்பு மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் கலந்து கொண்டு சனாதன தர்மத்தைப் பற்றியும், இந்துக்களைப் பற்றியும் பேசியவை, இந்து மக்களின் மனதை புண்பட வைத்துள்ளது. எனவே, இவர்கள் இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in