

திருத்தம் செய்யப்பட்ட எஸ்சி., எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், மீண்டும் அவசர சட்டமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு.
களம் இலக்கிய அமைப்பு சார்பில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு எழுதிய `அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்’ நூல் அறிமுக விழா திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் சந்துரு பேசியது:
7 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலங்களில் 96 ஆயிரம் வழக்கு களை விசாரித்து தீர்ப்பு அளித் திருக்கிறேன். இதில் முக்கியமான 150 தீர்ப்புகளைப் பற்றி தொகுத்து புத்தகமாக எழுதியிருக்கிறேன். இப்படி முக்கியமான நான் வழங்கிய தீர்ப்புகள் எதுவும் சட்டப் புத்தகத்தில் வெளியாகாதது ஒருவகையான நவீன தீண்டாமை.
அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு அனைவரும் சமம் என்று சொல்கிறது. ஆனால், அப்படி சமமாக நடத்தப்படவில்லை. ஐந்தில் ஒரு இந்தியருக்கு, தமிழருக்கு சட்ட நீதி மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த புறக்கணிப்பு தொடர்கிறது.
சாதியை நியாயப்படுத்தி பேசிய ஒருவரை இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்துக்கு தலைவ ராக நியமித்திருப்பது தவறானது.
எஸ்சி., எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் கடந்த மார்ச் மாதம் சில திருத்தங்களுடன் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டது. இது 6 மாதங்களில் மக்களவையில் சட்டமாக நிறைவேறாவிட்டால் காலாவதியாகிவிடும். இந்த சட்டத்தின் மூலம், சில வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. ஆனால், இந்த சட்டத்தைப் பற்றி ஆய்வு செய்ய புதிய அரசு ஒரு குழு அமைத்துள்ளது. குழுவின் ஆய்வு முடிவு வரும்வரை இந்த சட்டத்தை உயிர்ப்பிக்க மீண்டும் இதை அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டும்.
சிலர் மீது எஸ்சி., எஸ்டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, அதனால் ரத்து செய்ய வேண்டும் என்று புகார் கூறுகிறார்கள். இது ஒரு வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு எதிரான கருத்தியல் பிரச்சாரம்.
மேலும், நீதித்துறையில் மரண தண்டனையை ஒழித்து மரண தண்டனைக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்றார்.
எழுத்தாளர் ரவிக்குமார் பேசியது: இந்த புத்தகம் சமூக நீதி பேசக்கூடிய அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆவணம்.
நம்முடைய நீதி அமைப்பு முறை சட்ட, சாட்சியங்களின் அடிப் படையில் தீர்ப்பு வழங்குகிற அமைப்பு. சந்துரு சட்டப் புத்தகத்தை தாண்டி மனித சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் விழு மியங்களிலிருந்து தீர்ப்புக் கான ஆதாரங்களை எடுத்துக் கொண்டு தனது பரப்பை விசால மாக்கிக்கொள்கிறார். எனவே, இது தீர்ப்புகள் என்பதைத் தாண்டி நீதி என்ற தன்மையைப் பெற் றிருக்கிறது.
இந்தியாவில் சமூக மூலதனம், கலாச்சார மூலதனத்தால் சாதி யால் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் மக்கள் மேலே வரமுடியவில்லை. இவர்கள் சமூக மூலதனத்தையும் கலாச்சார மூலதனத்தையும் திரட்ட முயற்சி செய்தால் ஆதிக்க சாதி யினரால் அடித்து நொறுக்கப்படு கின்றனர். இவர்களைக் காப் பாற்றும் புரிதலை நீதிபதி சந்துரு, அம்பேத்கர் ஒளியில் கண்டிருக்கிறார்.
மேலும், இந்த நூலின் தயாரிப்பு செலவு போக விற்பனைத்தொகை அனைத்தும் திண்டிவனத்தில் உள்ள தாய்த்தமிழ் தொடக் கப்பள்ளிக்கு அளிக்கப்படுகிறது என்றார்.
நூல் அறிமுக நிகழ்வில் கவிஞர் நந்தலாலா, பள்ளி முதல்வர் துளசிதாசன், மருத்துவர் சுப. திருப்பதி, சேதுராமன், ரமேஷ் பாபு, சந்திரகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.