Published : 07 Sep 2023 04:00 AM
Last Updated : 07 Sep 2023 04:00 AM

கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நான்கு நாட்கள் பகுதியளவு ரத்து

கோவை: கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், 4 நாட்கள் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அரக்கோணம், சோளிங்கர் ரயில் நிலையங்களில் தண்டவாள புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், வரும் 13, 20, 27 மற்றும் அக்டோபர் 4-ம் தேதிகளில், கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் புறப்பட்டுச் செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12680), காட்பாடி-சென்னை சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.35 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12679), சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில், காட்பாடியில் இருந்து மேற்கண்ட தேதிகளில் கோவை புறப்பட்டு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் தேதி சிறப்பு ரயில் : சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பில், “பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கொச்சுவேலி ( திருவனந்தபுரம் ) - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்:06048), வரும் 10-ம் தேதி மாலை 5 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடையும்.

செல்லும் வழியில் இந்த ரயில் கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் நகரம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x