Published : 07 Sep 2023 04:02 AM
Last Updated : 07 Sep 2023 04:02 AM
கோவை: திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியிருந்தார்.
அவரது பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இவ்விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியார் என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தச் சூழலில், பீளமேடு, காந்தி புரம் உள்ளிட்ட கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் பாஜக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாருக்கு கண்டனம் தெரிவித்தும், பாஜக சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில்,‘சனாதனம் எங்கள் உயிர் மூச்சு’ என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT