சென்னையில் லைட் மெட்ரோ செயல்படுத்த ஆய்வு: 2.50 லட்சம் பேரிடம் கருத்து கேட்க திட்டம்

சென்னையில் லைட் மெட்ரோ செயல்படுத்த ஆய்வு: 2.50 லட்சம் பேரிடம் கருத்து கேட்க திட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், லைட்மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும், இத்திட்டம் தொடர்பாக 2.50 லட்சம் பேரிடம் கருத்து கேட்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேம்பாட்டு குழுமம் திட்டமிட்டுள்ளது.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப, புதிய போக்குவரத்து திட்டத்தை தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து மேம்பாட்டு குழுமம் முடிவு செய்துள்ளது. மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்து கொள்கையின் அடிப்படையில், அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில், இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், புதிய போக்குவரத்து திட்டத்தில், லைட் மெட்ரோ தொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அண்ணா நகர், தியாகராய நகர், போன்ற இடங்களில் லைட்மெட்ரோ அமைப்பது தொடர்பாக பொது போக்குவரத்து பயன்பாடு, வாகன நிறுத்த வசதி உட்பட 10-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதன் அடிப்படையில், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. மேலும், இத்திட்டம் தொடர்பாக, 2.50 லட்சம்பேரிடம் நேரடியாக கருத்து கேட்கஒருங்கிணைந்த போக்குவரத்து மேம்பாட்டு குழுமம் திட்டமிட்டுள்ளது.

சாலையோரம் அல்லது மையப்பகுதியில் தண்டவாளம் அமைத்துமணிக்கு 30 கி.மீ. வேகத்தில் ரயில்செல்லும் என திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இந்தத் திட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ என்பது ட்ராம் வண்டியின் நவீன வடிவமாக இருக்கும். தற்போது உள்ள மெட்ரோ ரயில் திட்டங்களில் உயர்மட்ட பாதை அமைக்க ஒரு கி.மீ.க்கு சுமார் ரூ.250 கோடியும், சுரங்கப்பாதை அமைக்க சுமார் ரூ.550 கோடியும் ஆகும். ஆனால், இந்த லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஒரு கி.மீட்டருக்கு ரூ.100 கோடிதான் ஆகும். எனவே, இந்த லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது.

லைட் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த 1 கி.மீ.க்கு ரூ.100 கோடிதான் ஆகும். எனவே இதற்கு ஆய்வு செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in