Published : 07 Sep 2023 06:30 AM
Last Updated : 07 Sep 2023 06:30 AM

பெருங்களத்தூரில் மூளைசாவு அடைந்த தாயின் உடல் உறுப்புகள் தானம் தந்த மகன்

தாம்பரம்: பெருங்களத்துாரில், மூளைச் சாவு அடைந்த தாயின் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை, அவரது மகன் தானமாக வழங்கினார்.

தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது கணவர் மதியழகன் மற்றும் முதல் மகன்அரவிந்த ஆகிய இருவர், உடல் நிலை சரியில்லாமல், சிலஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதையடுத்து, இரண்டாவது மகன் கயிலாஷ்ராஜூடன், லட்சுமி வசித்து வந்தார்.

லட்சுமிக்கு, 5 ஆண்டுகளாக தலைவலி இருந்துள்ளது. இந்நிலையில், 3 மாதங்களாக தலைவலிஅதிகமானதால், தாம்பரத்தில்உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு சோதனை செய்ததில், மூளையில் ரத்த கசிவு இருந்தது தெரியவந்தது.

அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி, சில நாட்களுக்கு முன், அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், அறுவை சிகிச்சை பலனின்றி, லட்சுமி மூளை சாவு அடைந்தார். இதையடுத்து, தாயின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை அவரது மகன் தானமாக வழங்கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x