விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சித் தலைவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சித் தலைவர்கள்
Updated on
1 min read

சென்னை: மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். தொடர்ந்து, திட்டத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் பேசியதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் சாதியை முன்னிறுத்தி கடன் வழங்குவதில் உள்நோக்கம் புரிகிறது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்து முடிக்கின்றனர். எனவே வாக்குகளை மனதில் கொள்ளாமல் நாம் கருத்துகளை அச்சமின்றி வெளிப்படுத்த வேண்டும். எதற்கும் அஞ்ச மாட்டோம் என கூறியவர்கள் இன்று இந்தியாவின் பெயரை மாற்றம் செய்ய நினைக்கின்றனர்.

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா: சனாதனமும் விஸ்வகர்மா யோஜனாவும் வேறல்ல. தொழிலை பிரிப்பது சமூகத்துக்கு தேவை. ஆனால் அதை குலத்தொழிலோடு சேர்த்து சாதியாக பிரிக்கப்படுகிறது. இவர் மகன் இதைத்தான் செய்ய வேண்டும் என்னும் குலத்தொழிலை ஒழிக்கும்கட்டாய கடமை நமக்கு இருக்கிறது.

விசிக தலைவர் திருமாவளவன்: இது சாதிய கட்டமைப்பைநிலைப்படுத்துவதற்கான முயற்சி.திறன் மேம்பாட்டு பயிற்சி என்பதுவேறு. ஆனால் இத்திட்டத்தில் தொழிலில் திறன் பெற்றவர்களை குலத் தொழிலாளியாக்க வேண்டும்என்ற ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை நிறைவேற்றுகின்றனர். இவ்வாறு அவர்கள் பேசினர்.

மார்க்ச்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், எழிலன் எம்எல்ஏ,இந்திய யூனியன் முஸ்லீம் லீக்மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் புதுமடம் ஹலீம், மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ.வந்தியத்தேவன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், திக துணை தலைவர் கலி.பூங்குன்றன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in