

சென்னை: மீனவர்களுக்கான குழு விபத்து இழப்பீடு பெறாத 205 குடும்பங்களுக்கு ரூ.4.10 கோடி இழப்பீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனவர்களுக்கான குழு விபத்து காப்புறுதி திட்டம் செயல்படாத 2020 ஜூன் 1 முதல் 2021 அக்.18-ம் தேதி வரை உயிரிழந்த 205 மீனவர், மீனவ மகளிர் குடும்பங்களின் துயரை போக்கும் வகையில் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் அக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அறிவிப்பை கடந்த ஆக.18-ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, 205 மீனவர், மீனவ மகளிர் குடும்பங்களுக்கு தலா ரூ.2லட்சம் வீதம் ரூ.4.10 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.