Published : 12 Jul 2014 11:24 AM
Last Updated : 12 Jul 2014 11:24 AM

தமிழகத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்திற்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை அதிகரிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்: "கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் மண்ணெண்ணைய் தேவை 55% அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் தமிழகத்திற்கு 29,060 கிலோ லிட்டர் மண்ணென்ணெய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவு 45% தேவையை மட்டுமே பூர்த்தி செய்துள்ளது. எனவே தமிழகத்திற்கு தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் கடந்த 3.6.2014 அன்று டெல்லியில் தங்களை சந்தித்த போது அளித்த மனுவில் இது தொடர்பாக குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்துகிறேன்.

கடந்த மார்ச் 2010 வரை மாதந்தோறும் 59,780 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. அதன் பிறகு படிப்படியாக 10 முறை மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மண்ணெண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதால் ஏழை மக்கள் விறகுகளை பயன்படுத்தும் சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசடையும்.

எனவே தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியை மத்திய அரசு தடுத்து நிறுத்தும் என நம்புகிறேன். எனவே, இவ்விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வழிவகை செய்ய வேண்டும்" இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x