தமிழகம்
பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளருக்கு அண்ணா பல்கலை. துரோணாச்சாரியார் விருது
சென்னை: இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துரோணாச்சாரியார் விருதை பல்கலை துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் நேற்று வழங்கினார்.
சென்னை, கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட ரஞ்சனி பார்த்தசாரதி, வி.ஆறுமுகம், எம்.ஹெலன் கலாவதி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
விருது பெற்ற ஆர்.பி.ரமேஷ், தோல்வியே வெற்றிக்கு படிக்கற்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு இளைஞர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில், பல்கலை திட்டப் பிரிவு இயக்குநர் கே.குணசேகரன், இணை இயக்குநர் வி.சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
