Published : 01 Dec 2017 10:26 AM
Last Updated : 01 Dec 2017 10:26 AM

மணல் குவாரி விவகாரம்: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பழ.நெடுமாறன் வரவேற்பு

தமிழக விவசாயம், இயற்கை வளத்தை பாதுகாக்கும் வகையில் மணல் குவாரிகளை மூட வேண்டுமென்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக ஆறுகளையும், விவசாயத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து மணல் குவாரிகளை 6 மாதத்துக்குள் மூடவேண்டும் என்றும், ஜல்லி குவாரிகளை தவிர கிரானைட் மற்றும் பிற கனிமவள குவாரிகளை மூடவேண்டும் என்றும் வெளிநாட்டிலிருந்து அரசே மணலை இறக்குமதி செய்யவேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறை யீடு செய்வது மணல் கொள்ளையர்களுக்கு துணை நிற்கும் போக்காகிவிடும். எனவே, அந்தத் தவறை செய்யாமல் உயர் நீதிமன்றத்தின் ஆணையை மதித்து ஏற்று அதை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்து கிறேன்.

இவ்வாறு பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x