திருத்தணி கோயிலில் புதிய வெள்ளி தேர் உலா: அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி தொடங்கி வைத்தனர்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் ரூ.4 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய வெள்ளி தேர் உலாவை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.4 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய வெள்ளி தேர் உலாவை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Updated on
1 min read

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ரூ.4 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய வெள்ளி தேர் உலாவை நேற்று அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறு படைவீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட வெள்ளித் தேரில் திருவிழாக் காலங்களில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதி உலா செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்த வெள்ளித்தேர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால், சுப்பிரமணிய சுவாமி, வெள்ளித் தேரில் வீதி உலா செல்லும் நிகழ்வு தடைபட்டு வந்தது.

இச்சூழலில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சுமார் ரூ.4 கோடி மதிப்பில், 528கிலோ வெள்ளித் தகடுகள் உள்ளிட்டவற்றால் புதிய வெள்ளித் தேர் உருவாக்கும் பணி, கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, புதிய வெள்ளி தேர் உலா நேற்று திருத்தணிசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில்,இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பங்கேற்று, வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளிய புதிய வெள்ளி தேரை பிடித்து இழுத்து உலாவை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் , திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் தரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in