போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் வேண்டுகோள்

போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் தலைமையிலான தொழிற்சங்கத்தினர் அண்மையில் சந்தித்துபேசினர். அப்போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும். போக்குவரத்து முன்னாள் செயலர் தேவிதாரால் வெளியிடப்பட்டு, போக்குவரத்துக் கழகங்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள 8 அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 2016-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in