உலக நாடுகளின் பிரச்சினைகளுக்கு இந்தியாவில் தீர்வு உள்ளது: ஆளுநர் தமிழிசை பெருமிதம்
சென்னை: உலக நாடுகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்தியாவில் தீர்வுஉள்ளதாக தெலங்கானா ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
சென்னை ‘ஆகாஷ்வாணி' சார்பில் நடத்தப்பட்ட ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகளின் நிறைவு விழாதி.நகரில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஜி20 மாநாட்டின் ஆய்வுக்கட்டுரை தொகுப்பை வெளியிட்டார்.
விழாவில் ஜி20 மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: ஜி20 மாநாட்டுக்கு இந்தியா பொறுப்பேற்று இருப்பது சுழற்சி முறையில் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் நமது முயற்சிகளின் பலனாகத்தான் இது சாத்தியாமாகியுள்ளது. இன்று உலகநாடுகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்தியாவில் தீர்வு உள்ளது.
டெல்லியில், தமிழகம் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதற்கு உதாரணம் நமதுதமிழ் செங்கோல் அங்கே தலை நிமிர்ந்து நிற்கிறது.
உலகளவில் பலமான பிரதமராக மட்டுமின்றி, பிரபலமான பிரதமராகவும் மோடி வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நாட்டின் மணிமகுடம் என்பது கலாச்சாரம்தான். ஆனால், சில தமிழகஅமைச்சர்களூக்கு தமிழ் கலாச்சாரமே தெரிவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, அருண் எக்ஸ்செலோ குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பி.சுரேஷ், அகில இந்திய வானொலி நிலையத் தலைவர் எஸ்.பாண்டி, சென்னை வானொலி நிகழ்ச்சித் துறை தலைவர், மருத்துவர் ஜெய மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
