Published : 03 Sep 2023 01:40 PM
Last Updated : 03 Sep 2023 01:40 PM

செப்.15 முதல் 4 நாட்களுக்கு அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் - இபிஎஸ் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: அண்ணாவின் 115வது பிறந்தநாள் மற்றும் மதுரையில் நடந்த பொன்விழா நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கி, வரும் செப். 15ம் தேதி முதல் செப்.19ம் தேதி வரை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2023, 16.9.2023, 17.9.2023 மற்றும் 19.9.2023 ஆகிய நான்கு நாட்கள், `அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் சாராம்சங்களை விளக்கிடும் பொதுக்கூட்டங்கள்' கட்சியின் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும்; புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 15.9.2023 அன்று அண்ணாவின் திருஉருவச் சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் மற்றும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுபவர்களின் விவரங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி தாம்பரம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x