Published : 03 Sep 2023 08:13 AM
Last Updated : 03 Sep 2023 08:13 AM

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 10-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் 4-ம் தேதி காலை 9.30மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இக்கூட்டம் வரும் 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சி தலைமைஅலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், வரும் 10-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்’’ என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x