

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி சென்றார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேகருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம், நீட் தேர்வு, ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு புதிய பொறுப்பு விவகாரம் போன்றவைகளால் ஆளுநர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், அவ்வப்போது டெல்லி செல்லும் ஆளுநர் தமிழகத்தின் அரசியல் நிலவரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை ஏர் - இந்தியா விமானத்தில் ஆளுநர் டெல்லி சென்றார். இன்று மாலை சென்னை திரும்புகிறார். ஆளுநரின் இந்த டெல்லி பயணம் அவரது தனிப்பட்ட சொந்த பயணம் என்று கூறப்படுகிறது.