

சென்னை: தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பிராமண சமாஜம் தலைவர் நா.ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், தொழிலதிபர்கள், வேதவிற்பன்னர்கள், விஞ்ஞானிகள், சமூகப் பெரியவர்கள் மற்றும் அனைத்துப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
பொதுக்குழுவில் சமூக நலன்சார்ந்த அனைத்து பொது விஷயங்களும் விவாதிக்கப்பட உள்ளன. பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான (EWS) கோட்டாவை உடனடியாக தமிழகத்தில் அமல்படுத்தல், கோயில் அர்ச்சகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், சமையல் கலைஞர்களுக்கு உதவிகளைச் செய்தல், இந்து மதத்தையும் அதன் கலாச்சாரத்தையும், சனாதன தர்மத்தையும் போற்றிப் பாதுகாத்தல் மற்றும் பல்வேறுசமூக நலன் சார்ந்த பிரச்சினைகள்குறித்து விவாதிக்க உள்ளோம்.