மகிளா நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம்

மகிளா நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம்
Updated on
1 min read

திருவள்ளூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவின் அடிப்படையில், கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள், சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் நேற்று முன்தினம் ராமாபுரம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார்.

சுமார் 6 மணி நேரம் நடந்த விசாரணையில், முக்கிய ஆவணங்களை நடிகை விஜயலட்சுமி வழங்கியுள்ளார். இந்நிலையில், சீமான் மீது அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக சென்னை-வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் கெளதம் தலைமையில், காவல் ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் அடங்கிய போலீஸாரால் பாதுகாப்புடன் நேற்று மதியம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்துக்கு நடிகை விஜயலட்சுமி அழைத்து வரப்பட்டார்.

அங்கு நீதிபதி பவித்ரா முன்பாக ஆஜரான விஜயலட்சுமி, சீமான் திருமணம் செய்ததற்கான ஆதாரப் புகைப்படம், அவர் பேசியதற்கான ஆடியோ, வங்கி பரிவர்த்தனை போன்ற விவரங்களை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக, 8 பக்கங்கள் அளவுக்கு வாக்குமூலமாக அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in