

சென்னை: அண்ணா நகரில் இயங்கிவரும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி கடந்த 10 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை வழங்கி வருகிறது. எண்ணற்ற மாணவ மாணவிகள் இங்கு பயின்று பல்வேறு அரசுப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
2022-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வில் 151 மாணவர்கள் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயின்று வெற்றி பெற்றனர். அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற இஷிதா கிஷோரும் இங்கு நேர்முகத் தேர்வுக்குப் பயிற்சிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக நேற்று தன்னூக்க வகுப்பு நடைபெற்றது. இந்த வகுப்பில் தமிழ் சினிமா இயக்குநர், நடிகர்,எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் தங்கர் பச்சான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழவேண்டும் என்றும் நாளைய தலைமுறைகளை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் எப்படிநேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்றும் உரையாற்றினார். இதில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி வகுப்புகளுக்கான சேர்க்கைசென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் கிளைகளில் நடைபெற்று வருகிறது. கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் இதனை தெரிவித்தார்.