Published : 31 Aug 2023 06:21 AM
Last Updated : 31 Aug 2023 06:21 AM

தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக காவலர் உணவு படி வழங்க அண்ணாமலை கோரிக்கை

சென்னை: தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்தில் நிலுவை வைத்துள்ள காவலர் உணவு படியை உடனடியாக வழங்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரக காவலர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் முதல் உணவுப் படி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.300 வீதம், ஒவ்வொரு மாதமும் 26 நாட்களுக்கு ரூ.7,800 என்ற முறையில் ஒவ்வொரு காவலருக்கும் சுமார் ரூ.45 ஆயிரம் வரை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.

ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சருக்கு மாத ஊதியத்தை மறுக்கவோ, தாமதப்படுத்தவோ செய்யாமல், தன்னலமின்றி, நேரம் காலம் நோக்காமல், பொதுமக்களைப் பாதுகாக்க ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு, உணவுப் படியை வழங்காமல் மறுப்பது, அவர்களுக்கு இந்த அரசு செய்யும் அநீதியாகும்.

எனவே, உடனடியாக ஆவடி, தாம்பரம் ஆணையரகக் காவலர்களுக்கான உணவு படியை, ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு மொத்தமாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x