

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இதுவரை 84,982 வாக்குகள் எண்ணப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.
ஆர்.கே.நகரில் அவரது வெற்றி உறுதியாகிவிட்டது.
9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 44,308 வாக்குகள் பெற்று தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 21,972 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 11,431 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 1,933 வாக்குகள் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 571 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மொத்தம் பதிவான 1,76,885 வாக்குகளில் இதுவரை 84,982 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. எண்ணப்பட்ட வாக்குகளில் பாதிக்கும் மேல் அதாவது 44,308 வாக்குகளை டிடிவி தினகரன் பெற்றுள்ளார்.