

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைகளில் அம்மா உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு ஒன்று வீதம் 200 அம்மா உணவகங்கள் திறக்கப் பட்டன. இந்த உணவகங் களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து ஏழை-எளிய நோயாளிகள் பயன்பெறும் வகையில் சென்னையில் 7 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை தொடங்க மாநகராட்சிமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி முதல் கட்ட மாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ராயபுரம் ஆர்எஸ்ஆர் மருத்துவ மனை ஆகியவற்றில் அம்மா உணவக கட்டிடத்திற்கான பணிகள் முடிந்துள்ளது.
இந்த 2 அரசு மருத்துவமனைகளிலும் விரைவில் அம்மா உண வகம் திறக்கப்பட உள்ளது. இதே போல ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவல்லிக் கேணி கஸ்தூர்பா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை ஆகிய வற்றில் அம்மா உணவகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.