

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையில் வாழும் மயில், மான் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது கிரிவலப் பாதைக்கு வருவதுண்டு.
இந்நிலையில் கிரிவலப் பாதை நிருதி லிங்கம் அருகே 2 மயில்கள் நேற்று முன்தினம் மாலை சுற்றி வந்தன. அவை திடீரென ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. சுமார் 10 அடி உயரத்துக்கு எழும்பி சண்டையிட்டன. தரையிலும் முட்டிக்கொண்டன. பின்னர், சாலையை கடந்து வனப் பகுதிக்குள் நுழைந்துவிட்டன. அழகிய மயில்கள் மோதிக் கொண்டதை, கிரிவலம் சென்ற பக்தர்கள் பார்த்து ரசித்தனர். பலர், செல்போனில் வீடியோ படம் எடுத்து மகிழ்ந்தனர்.