லியோனியை கைது செய்ய வேண்டும்: மதுரை காவல் ஆணையரிடம் அதிமுக நிர்வாகிகள் புகார்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
1 min read

மதுரை: பொது இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பெண்களை தரக்குறைவாக பேசிய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் என மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் அதிமுகவினர் புகார் அளித்தனர்.

திண்டுக்கல் லியோனி, கடந்த 21-ம் தேதி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரம் தாழ்த்தி பேசியதாக அதிமுகவினர் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், அவரை கைது செய்யக்கோரி, மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் அதிமுக மண்டல தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் அந்த அணி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

இது குறித்து ராஜ் சத்யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 21-ம் தேதி தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சென்னை திருவொற்றியூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை வகுக்கக்கூடிய பொறுப்பில் உள்ள ஒருவரே ஆணாதிக்கத்துடன் பெண்களை தரக்குறைவாக பேசியிருப்பது தவறு. பாடநூல் கழகத் தலைவர் பதவியில் இருந்து அவரை உடனடியாக நீக்க வேண்டும். திமுக ஆட்சியில் அவர்கள் கட்சி பெண்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை.

கடந்த மூன்று நாட்களாக லியோனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. பெண்களுக்கு எதிராக தவறான வார்த்தைகள் இருந்தாலே நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கா விட்டால், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

ராமநாதபுரம்: இதேபோன்று ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் ஜி.முனியசாமி தலைமையில் அதிமுகவினர் நேற்று காவல் கண்காணிப்பாளர் பி.தங்க துரையிடம் புகார் மனு அளித்தனர். அப்போது மாவட்ட அவைத் தலைவர் சுவாமிநாதன், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால் பாண்டியன், அதிமுக வழக்கறிஞர்கள் செந்தில் குமார், கருணாகரன் உள்ளிட்டோர் உடன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in