

இரு பெண்கள் மற்றும் குழந்தையை கொன்றவருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (33). இவர், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சூண்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகலா என்பவரை காதலித் துள்ளார். கடந்த 2010 ஜனவரியில் சந்திரகலாவின் சித்தப்பா மகள் விஜயகலாவின் வீட்டுக்குச் சென்று சந்திரகலாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித் ததால் விஜயகலா மற்றும் சந்திரகலா ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட் டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த தர்மராஜ் சந்திரகலா, விஜயகலா மற்றும் அவரின் குழந்தை தீபா (2) ஆகியோரை வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸார் வழக்கு பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.
உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப் பட்டது.
இதில் மூன்று பேரை கொலை செய்த தர்மராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பளித்தார்.மூன்று ஆயுளையும் தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.