Published : 29 Aug 2023 04:02 AM
Last Updated : 29 Aug 2023 04:02 AM
விழுப்புரம்: விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் செப்டம்பர் 3 ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக விழுப்புரத்தில் இருந்து தினந்தோறும் காலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண்- 16854), காட்பாடி - திருப்பதி இடையே செப்டம்பர் 3-ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட் டுள்ளது. இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.
எதிர் வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து தினந்தோறும் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி - காட்பாடி இடையே செப்ட ம்பர் 3-ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடியில் இருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT