

திருச்சி: எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே காரைக்குடி வழியாக செப்.25-ம் தேதி முதல் புதிய வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர ரயில் (16361) திங்கள் மற்றும் சனிக் கிழமைகளில் எர்ணாகுளத்திலிருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுவழித் தடத்தில், வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர ரயில் (16362) செப்.26-ம் தேதி முதல் செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் வேளாங்கண்ணியிலிருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இந்த ரயில், கொல்லம், செங்கோட்டை, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர் வழியாக இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.