Published : 28 Aug 2023 06:28 AM
Last Updated : 28 Aug 2023 06:28 AM

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 3-வது நபர் மதிப்பீட்டு முறையை ரத்து செய்ய கோரிக்கை

சென்னை: தமிழக ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய செயலாளர் அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும், செயலருக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிக்கும் முதலாமாண்டு, 2-ம் ஆண்டு மாணவர்கள், எண்ணும் எழுத்தும் திட்டத்தை 3-ம் நபர் மதிப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களிலும் இன்று (28-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை 3 நாட்களுக்கு பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து செப்.1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பள்ளிகள் வாரியாக 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பஇருக்கின்றனர்.

ஏற்கெனவே 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சி முடித்து 25, 30 ஆண்டுகளாக பாடம் நடத்திவரும் ஆசிரியர்களின் செயல்பாட்டை, பி.எட். படித்துவரும் முதலாம் ஆண்டு மாணவர்களும், 2-ம் ஆண்டு மாணவர்களும் வெறும் 3 நாட்கள் மட்டும் பயிற்சி பெற்று 3-ம் நபராக மதிப்பீடு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்: இதன்மூலம் ஆசிரியர் சமுதாயத்தை அவமானப்படுத்துகிறீர்கள். இதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இத்திட்டத்தில் 3-ம் நபர் மதிப்பீடு குறித்து சரியான விளக்கம் அளிக்காவிட்டால் பள்ளிக்கு ஆய்வுக்கு வருபவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். எனவேஎண்ணும் எழுத்தும் திட்டத்தை 3-வது நபர் மதிப்பீடு செய்யும் முறையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x