

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில் குறைதீர்ப்பு முகாம் இன்று (28-ம் தேதி) நடைபெறுகிறது.
இந்த முகாம் சென்னை மாவட்டத்துக்கு, தேனாம்பேட்டை நீதிபதி பஷீர் அகமது சயீத் பெண்கள் கல்லூரியிலும், திருவள்ளூர் மாவட்டத்துக்கு அய்மா அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அய்மா அலுவலகத்திலும் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கல்பட்டு லிட்டில் ஜாக்கி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழில்துறை வளர்ச்சி மையத்திலும் நடைபெறுகிறது.
முகாமில் பங்குபெற விரும்புபவர்கள் தங்களின் விவரங்களை Google Form இல் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுவதாக வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 பி.ஆண்ட்ரூ பிரபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.