அதிமுக மாநாடு வெற்றியை கொண்டாட மதுரையில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு விருந்து

மதுரை வலையங்குளத்தில் அதிமுக தொண்டர்களுக்கு அசைவ விருந்து பரிமாறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அருகில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்டோர்.
மதுரை வலையங்குளத்தில் அதிமுக தொண்டர்களுக்கு அசைவ விருந்து பரிமாறிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அருகில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் மாநாடு நடந்த இடத்தில் தொண்டர்கள், பொதுமக்களுக்கு, அக்கட்சியினர் கிடா வெட்டி விருந்து வைத்தனர்.

மதுரையில் அதிமுக மாநில மாநாடு வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வலையங்குளம் கருப்பசாமி கோயிலில் கிடா வெட்டி தொண்டர்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., புறநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், மண்டல தகவல் தொழில் நுட்பப் பிரிவுச் செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், மாவட்டச் செயலாளர்கள் எம்.ஏ.முனியசாமி ( ராமநாதபுரம் ), ரவிச்சந்திரன் ( விருதுநகர் கிழக்கு ), முன்னாள் எம்எல்ஏக்கள் மருத்துவர் சரவணன், கே.தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், மாணிக்கம், நீதிபதி, ஜெ.பேரவை நிர்வாகி வெற்றிவேல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், "மதுரையில் நடந்த மாநாடு அதிமுகவுக்கு மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. இன்று மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக பழனிசாமி உருவெடுத்துள்ளார். நாளைக்கே சட்டப்பேரவைத் தேர்தல் வந்தாலும், அவர் முதல்வராகிவிடுவார்," என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in