Published : 28 Aug 2023 04:08 AM
Last Updated : 28 Aug 2023 04:08 AM
விருத்தாசலம்: திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட கீழ் செருவாய் கிராமத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்ட பணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
அந்த ஊராட்சிமன்ற அலுவலகத்தில் திரண்டிருந்த பெண்களிடம், அரசின் திட்டங்கள் குறித்தும், அவை பயனாளிகளை வந்தடைகிறதா எனக் கேள்வி எழுப்பினார். அப்போது சில பெண்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 எங்களுக்கெல்லாம் கிடைக்குமா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வெ.கணேசன், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதன்படி அனைவருக்கும் வழங்க தான் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. அந்த விண்ணப்பம் உங்களுக்கு கிடைத்ததா எனவும், அதை பூர்த்திசெய்து கொடுத்தீர்களா எனவும் எதிர்கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பெண்கள், நாங்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் சிலர் மகளிர் உரிமைத் தொகை வராது என்கிறார்களே எனத் தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், "இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நீங்கள் கவலைப்பட தேவை யில்லை, உங்களுக்கு கிடைக்கும். ஆனால் எனது வீட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்காது. அரசு உயர் அதிகாரிகள் குடும் பத்தினருக்கும் கிடைக்காது. எங்களை போன்றவர்களின் குடும்பங்களுக்கு இது தேவையிருக் காது. மற்றபடி ஊராட்சிகளில் உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT