Published : 16 Dec 2017 01:55 PM
Last Updated : 16 Dec 2017 01:55 PM

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: ஸ்டாலின் வாழ்த்து

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ராகுல் காந்திக்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் அவர் பூர்த்தி செய்வார். மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் பெருமைகளை ராகுல் காந்தி மீட்டெடுப்பார் என்றும் நம்புகிறேன்’’ என ஸ்டாலின் கூறியுள்ளார்.

— M.K.Stalin (@mkstalin) December 16, 2017

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x