சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஆக.30 முதல் வேலைநிறுத்தம்: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஆக.30 முதல் வேலைநிறுத்தம்: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடஉள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் நிஜ லிங்கம் கூறியதாவது: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கி வருகின்றன. இறுதியாக கடந்த 2019-ம் ஆண்டு தண்ணீர் எடுப்பதற்கான உரிமம் புதுப்பிக்கப்பட்டது.

அதன் பிறகு கரோனா காலத்தை காரணம் காட்டி உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உரிமம் புதுப்பித்து வழங்கும் வேளையில், சென்னையைச் சுற்றிய மாவட்டங்களில் உரிமம் புதுப்பித்து தர மறுக்கப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் எடுக்க முயற்சித்தபோது, மின்சாரத்தை துண்டித்து அனுமதி மறுக்கப்பட்டது.

எனவே,காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். வரும் 30-ம் தேதி முதல் மேற்கூறிய 4 மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரிகள் முழுமையாக இயங்காது. உரிமத்தை புதுப்பிக்க அனுமதி வழங்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in