

சென்னை: தேசிய அளவிலான போட்டிகளில்பதக்கம் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், சர்வதேச மற்றும்தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்க கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையில், தேசியஅளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளிவீரர், வீராங்கனைகளுக்கு உயரியஊக்கத்தொகை வழங்கும் பிரிவுஇடம் பெறவில்லை. இக்குறையை கண்டறிந்து அதனைக் களைய நடவடிக்கை எடுக்கும்படி, இளைஞர்நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளில் மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளிமற்றும் வெண்கலப் பதக்கம் பெறுபவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையாக முறையே ரூ.5 லட்சம்,ரூ.3 லட்சம் மற்றும் ரூ.2 லட்சமும்,
இளையோர் பிரிவில் முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் வழங்கப்படும். இதற்கான அரசாணை வெளியிடப்பட் டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.