Published : 26 Aug 2023 05:44 AM
Last Updated : 26 Aug 2023 05:44 AM

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: சென்னை அரசு பள்ளிகளில் அமைச்சர்கள், தலைவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். உடன் மேயர் பிரியா.

சென்னை: சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்கத் திட்ட தொடக்க நிகழ்ச்சிகளில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ, மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரைபடிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில் திருவல்லிக்கேணி நெடுஞ் சாலையில் உள்ள சென்னை நடு நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டத்தைத் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, ``காலை உணவுத் திட்டத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகை 30 முதல்40 சதவீதம் அதிகரிக்கும்'' என்றார்.

இதேபோல், சைதாப்பேட்டை தொகுதியில் மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொளத்தூர் தொகுதியில் மடுமாநகர் சென்னை நடுநிலைப் பள்ளியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச் சர் பி.கே.சேகர்பாபு திட்டத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களு டன் அமர்ந்து உணவருந்தினர்.

அரும்பாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிமுக
பொதுச்சயலாளர்வைகோ மாணவர்களுடன் உணவருந்தினார்.

சென்னை எம்எம்டிஏ காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்எம்டிஏ அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ எம்.கே.மோகன் திட்டத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சிகளில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ் ணன், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக் குழுத் தலைவர்கள் எஸ்.மதன் மோகன், சரிதா மகேஷ்குமார், எம்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர்.

காலை உணவுத் திட்ட விரி வாக்கத்தின் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என மொத்தம் 358 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 65,030 மாணவ, மாணவி கள் கூடுதலாக பயன்பெறுகின்றனர்.

35 மைய சமையல் கூடங்கள்: இத்திட்டத்துக்கு 35 மைய சமை யற்கூடங்களில் இருந்து காலை உணவு தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x