அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம் கைதிகள் 37 பேரை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம் கைதிகள் 37 பேரை விடுவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் 37 பேரை விடுவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

‘25 ஆண்டு ஆயுள் சிறைவாசி கள் விடுதலை கூட்டமைப்பு’ சார்பில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற வுடன், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, 14 ஆண்டுகள் தண்ட னைக் காலம் முடிந்த 700 சிறை வாசிகளை விடுதலை செய்ய அரசு ஆணை பிறப்பித்தது. ஆளுநர் அந்த அரசாணையை ஏற்று, கணிசமான பேரை விடுவித்து இருக்கிறார்.

இன்னும் சிலர் விடுவிக்கப்பட உள்ளனர்.ஆனால், 20, 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்துசிறையில் இருந்து வரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 37 சிறைவாசிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

வரும் செப்டம்பர் 15, அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசு வழக்கம்போல 14 ஆண்டுகள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதி களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் 25 ஆண்டு களுக்கும் மேலாக சிறையில் உள்ள 37முஸ்லிம்களையும் விடுதலை செய்யவேண்டும். அவர்களின் குடும்பங்களைப்பாதுகாக்கும் வகையிலும், அவர்கள் திருந்தி வாழவும் அவர்கள் மீது கருணைகொண்டு தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக முதல்வரை சந்தித்து முறையிடவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in