ராயபுரம் அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.5 கோடி சொத்துகள் மீட்பு

ராயபுரம் அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.5 கோடி சொத்துகள் மீட்பு
Updated on
1 min read

சென்னை: ராயபுரத்தில் அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்புள்ள சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். சென்னை ராயபுரம் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமாக மன்னார்சாமி கோயில் தெருவில் சுமார் 1,200 சதுரடி பரப்பிலான வணிக பயன்பாட்டுக்கான இடத்தை அப்பகுதியை சேர்ந்தசங்கர் மற்றும் 7 நபர்கள்ஆக்கிரமித்து வைத்திருப்பதாகவும், இதனால், கோயிலுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர 9-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மண்டல உதவி ஆணையர் எஸ். நித்யா முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியோடு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில் சொத்து மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.5 கோடியாகும் என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in