

விழுப்புரம்: சந்திரயான்-3 திட்ட இயக்குநரின் தந்தைக்கு அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆகி யோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் சந்திராயன் 3 திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்கலன் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையொட்டி விழுப் புரத்தில் வீரமுத்துவேலுவுடன் படித்த நண்பர்கள், பொதுமக்கள் பட்டாசு வெடித்து நேற்று முன்தினம் மாலை கொண்டாடினர்.
இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்வில், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலுவின் தந்தை பழனிவேலுவுக்கு ஆட்சியர் பழனி சால்வை அணிவித்து, பழங்கள் மற்றும் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், "சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி யதன் மூலம் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை கிட்டியுள்ளது.
அதில் தங்கள் மகனின் பங்குஅளப்பரியது" இவ்வாறு அவர்தெரிவித்தார். அப்போது ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதற்கிடையே சந்திராயன் 3 திட்ட இயக்குநர் வீரமுத்து வேலுவின் தந்தை பழனிவேலுவை நேற்று மாலை அவரது இல்லத்தில் அமைச்சர் பொன்முடி, தன் மனைவி விசாலாட்சியுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜனகராஜ், நகர்மன்ற உறுப்பினர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொன்முடி, தன் மனைவியுடன் சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.