

நாங்குநேரி: புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் நெல்லை பகுதியின் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் (வயது 33), சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக நேற்று காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு காரில் சென்றுள்ளனர் புதிய தலைமுறை செய்தி குழுவினர். பணியை முடித்துக் கொண்டு இரவு நெல்லை திரும்பும் போது நாங்குநேரி டோல்கேட் அருகில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார்.
அவருடன் காரில் பயணித்த செய்தியாளர் நாகராஜன் உட்பட மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். உயிரிழந்த சங்கருக்கு மனைவியும், ஏழு வயதில் மகனும் உள்ளனர்.