தீபாவளி பண்டிகைக்காக தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க சுற்றுலா துறை டெண்டர்

தீபாவளி பண்டிகைக்காக தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்க சுற்றுலா துறை டெண்டர்
Updated on
1 min read

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளை அமைக்க சுற்றுலாத் துறை டெண்டர் கோரியுள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கான டெண்டரை தமிழ்நாடு சுற்றுலாத் துறை கோரியுள்ளது. ஒப்பந்தம் கோருவதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 30-ம் தேதி என்றும், மொத்தம் 55 பட்டாசு கடைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கடைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும், பட்டாசு விற்பனை தீவுத்திடலில் 15 நாட்கள் நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in